இன்று நீலகிரி மற்றும் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதும் ரத்து - தெற்கு ரெயில்வே

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது.

Update: 2023-12-07 11:17 GMT

சென்னை, 

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்றும் ரெயில்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டில் இருந்து இன்று தெலுங்கானாவின் கச்சிகுடா செல்லும் விரைவு ரயில் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று சென்னை சென்ட்ரல் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் முழுவதுமாக ரத்து செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்