செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-08-30 12:02 GMT

சென்னை,

* பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியுள்ளது. அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* ஜார்க்கண்டில் சம்பாய் சோரன் பதவி விலகியதை தொடர்ந்து, ராம்தாஸ் சோரன் எம்.எல்.ஏ. இன்று மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.

* மும்பையில் பிரதமர் மோடி இன்று ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

* பாலியல் புகாரில், மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* ஜெர்மனியில் அகதிகளாக வசிக்கும் ஆப்கானியர்களில் சிலர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

* ஜனாதிபதி தேர்தல் என்பது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

* சிலைக்கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

* பாரத் டோஜோ யாத்திரை என்பது ஏழைகளை கேலி செய்வதாகாதா? என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

* வில் வித்தையில் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் தேவி பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்