செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-08-26 11:30 GMT

சென்னை,

* லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.

* ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

* கேரள நடிகை ஒருவர் கொல்லம் எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.

* பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.

* ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தன்வி பாத்ரி 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

* கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது என்று வி.சி.க. எம்.பி. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

* மக்கள் தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும் என்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

* பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

* லோக் ஜனசக்தி தலைவராக சிராக் பஸ்வான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்