செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-08-17 10:00 GMT

சென்னை,

* பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

* தமிழக விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை காணொளி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* பொது சிவில் சட்டம் என்பது மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பேச்சு என பிரதமர் மோடிக்கு தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

* பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் அரசு செலுத்தும் கட்டணத்தை தவிற கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது.

* கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

* பாரீசில் இருந்து வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

* விசிக தலைவர் திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் இன்னும் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

* மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

* திமுக அரசை கண்டித்து திருச்சியில் 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

* சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்படுவதாக ரெயில்வே மந்திரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்