செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-08-16 09:55 GMT

சென்னை,

* டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராடத்தில் ஈடுபட வேண்டும். என மருத்துவ இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

* அமேசான் வனப்பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

* 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* இன்று வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

* ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

* கருணாநிதி நினைவு நாணயம் வெளியீடு செய்வதற்கு மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

* புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்

* 2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விருதுகளை அள்ளியது 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம்.

* மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்