செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-08-08 11:04 GMT

சென்னை,

* தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

* ஆகஸ்ட் 15-ந் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

* வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை அளிக்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.

* காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

* புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும் 3 பேருக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 408 ஆக உயர்ந்துள்ளது .வனப்பகுதியில் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் மோடி 10ம் தேதி வயநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

* சிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

* ஜப்பானில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்