செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-07-29 11:14 GMT

சென்னை,

* சக்கர வியூகம்போல் நாடு தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

* காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

* நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

* பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி பெற்றுள்ளது.

* பாகிஸ்தானில் பழங்குடியின கிராமங்களில் ஏற்ப்பட்ட பயங்கர கலவரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

* தைவானில் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளதையடுத்து 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

* டெல்லியில் விதிகளை மீறிய 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

* தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் தோல்வியடைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்