செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-07-18 11:31 GMT

சென்னை,

* உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.

* நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது. அதே நேரம் தேர்வு மையம் வாரியாக, நகரம் வாரியாக தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வுகள் முகமைக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

* சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

* இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டது

* தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* சீனாவில் வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

* உலக ஜூனியர் ஸ்குவாஷ்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சவுரியா

* வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்