அருப்புக்கோட்டை அருகே புதிய கலையரங்கம்
அருப்புக்கோட்டை அருகே புதிய கலையரங்கத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சி வடக்கு தெருவில் கலையரங்கம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக கலையரங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கலையரங்க கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் பாலசந்தர், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த சாமிநாதன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.