பூஜை போட்டு திறக்கப்பட்ட புதிய டாஸ்மாக்... பொதுமக்கள் அதிர்ச்சி.. மதுப்பிரியர்கள் குதுகலம்..!

காஞ்சிபுரம் அருகே பூஜை போட்டு, படையலிட்டு திறக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-07-04 04:45 GMT

காஞ்சிபுரம்,

தமிழ்நாடு அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்த பிரச்சனைக்குரிய பகுதிகளில் இயங்கி வந்த அரசு மதுபான கடைகளை மூடியது.

அவ்வகையில் பல வருடங்களாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்கள் நடத்தியும் கலெக்டர், முதல் அமைச்சர் வரை மனு அளித்தும் அகற்றப்படாத இருந்த காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் சித்தரகுப்தர் திருக்கோயில் அருகே செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை மற்றும் மேட்டுதெரு பேருந்து நிறுத்தம் அருகே என இரு கடைகள் அகற்றப்பட்டதில் பொதுமக்கள் மகிழ்ச்சி கொண்டனர்.

இந்நிலையில் மூடப்பட்ட கடைக்கு இணையாக இன்று அகற்றபட்ட 4055 எண் கொண்ட அதே அரசு மதுபான கடை தேனம்பாக்கம் பகுதியில் இன்று போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.

தொடக்க பூஜையில் சாமி படம் அருகே வாழைப்பழம் குவாட்டர் பாட்டில் வைத்து பூஜை மேற்கொண்ட பின் 12 மணி அளவில் வியாபாரத்தை தொடங்க, சேரில் அமர்ந்து எப்ப திறப்பீங்க என காத்திருந்த மது பிரியர்கள் ஆவலுடன் வாங்கி சென்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு வந்திருந்த மதுபிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இனிப்புகள் வழங்கி குதுகலமாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதிவாசிகளிடம் கேட்டபோது , அரசு ஒரு பக்கம் மூடினால் மறுபக்கம் திறப்பது என அரசு செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்தனர்.

Full View


Tags:    

மேலும் செய்திகள்