சின்னாளப்பட்டியில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சின்னாளப்பட்டியில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-06-03 21:00 GMT

சின்னாளப்பட்டி வி.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33). இவர், நிலக்கோட்டை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், பச்சைமலையான்கோட்டையை அடுத்த கூத்தாம்பட்டியை சேர்ந்த பாரதிகனி (22) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வழக்கம்போல் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இரவில் தனது மாமனார், மாமியார் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த பாரதிகனி பின்னர் தனது அறைக்கு தூங்கச்சென்றுவிட்டார். இதற்கிடையே நேற்று காலை வேலை முடித்து தினேஷ்குமார் வீட்டிற்கு வந்தபோது, அவரது மனைவியின் அறை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தினேஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது பாரதிகனி வீட்டின் சட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

மேலும் இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாரதிகனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிகனிக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்