புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வாடிப்பட்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், அவருடைய கணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், அவருடைய கணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை சேர்ந்த சேகர் மகள் ெசர்மிளா (வயது 20). இவரும், சிவகங்கை மாவட்டம் கட்டிகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் மகன் அஜித்குமார்(24) என்பவரும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வாடிப்பட்டி அருகே தாதப்பநாயக்கன்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தனி குடித்தனம் நடத்தி வந்தனர். அஜித்குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டதால் விரக்தி அடைந்த செர்மிளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செர்மிளாவின் தந்தை சேகர், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா வழக்கு பதிவு செய்தார். திருமணமாகி 7 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை முயற்சி
இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, காதல் மனைவி இறந்த துக்கத்தில் அழுது கொண்டிருந்த அஜித்குமார் திடீரென பிளேடை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் கழுத்தில் காயம் அடைந்த அவரை, உடனே வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.