மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள்

மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களுக்கு கலாநிதி வீராசாமி எம். பி. அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-09-12 08:52 GMT

மணலி பாடசாலை தெருவில் சென்னை தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 720 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு எண்ணூர் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து ரூ.62.7 லட்சம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிய 6 வகுப்பறைகள், கழிவறைகள் கட்டுவதற்காக டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், தலைமை ஆசிரியை கோமேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்