கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், கடந்த 50 ஆண்டுகளாக தேர் இல்லை. இந்நிலையில் தற்போது அரசு உதவியுடன் பொதுமக்கள் ஒன்றிணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்துள்ளனர். அந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொன்னியம்மனை புதிய தேரில் எழுந்தருள செய்து, ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக இழுத்து சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இதில் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.