புதிய கட்டிட பணிகளை மேற்கொள்வது அவசியம்

புதிய கட்டிட பணிகளை மேற்கொள்வது அவசியம்

Update: 2022-12-28 15:57 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நேற்று திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நகர் ஊரமைப்பு குழு துணை இயக்குனர் ரமேஷ்குமார் பங்கேற்று பேசும்போது, 'நகர் ஊரமைப்பு பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பு நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் அனுமதி பெற்று கட்டுவது அவசியம். தமிழக அரசும் இதை கண்டிப்புடன் அமல்படுத்த அறிவித்துள்ளது. கட்டிடங்களை கட்டுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

கட்டிடங்கள் கட்டி பாதி நிலையில் இருக்கும்போது அனுமதி பெறலாம் என்று நினைக்கக்கூடாது. விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்காக தனி குழு அமைத்து கட்டிடங்களை ஆய்வு செய்யப்பட உள்ளது. அதனால் சிவில் என்ஜினியர்கள தாங்கள் மேற்கொள்ளும் கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, அனுமதி பெற்று அதன்பிறகு தொடங்க வேண்டும். கட்டிட உரிமையாளரிடம் இதை முறையாக தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கு அனுமதி பெறுவதில் சந்தேகங்கள், இடர்பாடுகள் இருந்தால் நகர் ஊரமைப்பு குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ தயாராக உள்ளோம்' என்றார்.

இதில் திருப்பூர் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தினர், சிவில் என்ஜினீயர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்தினார்கள்.

------------

Tags:    

மேலும் செய்திகள்