திருப்பதியில் வரிசையில் நிற்பதை தவிர்க்க புதிய முயற்சி... ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால், ஒரே நாளில் அதிக அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-12 11:33 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால், ஒரே நாளில் அதிக அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கம். ஒரு மணிநேரத்தில் 5 ஆயிரத்து 500 பேர் என்ற அடிப்படையில், 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், கோவிலுக்குள் உள்ள வெள்ளிவாசலில் இருந்து ஒரே வரிசையாக பக்தர்களை கருவறைக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் என, ஒரே நாளில் 92 ஆயிரத்து 238 பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். இதனிடையே, நேற்று ஒரேநாளில் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்