கோவில்பட்டியில்நேதாஜி நற்பணி இயக்கத்தினர்நூதன ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில்நேதாஜி நற்பணி இயக்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டியில் உலக தபால் தினத்தை முன்னிட்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தினர் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, நேதாஜி பெயரில் செயல்பட்டு வந்த ஆட்டுச் சந்தையை மீண்டும் செயல்படுத்தவும், அவரது உருவச் சிலையை அமைக்க வலியுறுத்தியும் தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நற்பணி இயக்கத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் அந்த இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.