நெமிலி பேரூராட்சி மன்ற கூட்டம்
நெமிலி பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.