மேலப்பாளையம் கல்லூரியில் நெல்லை தின விழா
மேலப்பாளையம் கல்லூரியில் நெல்லை தின விழா நடந்தது.
இட்டமொழி:
நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் நெல்லை லைப் இயக்கம் சார்பில், நெல்லை தின விழா நடந்தது. டாக்டர் பிரேமசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளருமான விஜிலா சத்யானந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதிய 'நீர், நிலம், மனிதர்கள்' என்ற புத்தகம் வெளியிட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.