நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் தாமதமாக புறப்படுமென அறிவிப்பு

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.;

Update:2024-09-05 16:42 IST

நெல்லை,

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06070) இயக்கப்பட்டு வருகிறது. மாலை 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரெயிலானது, விருதுநகர், காரைக்குடி, மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூரை காலை 8.30 மணிக்கு வந்தடைகிறது.

இந்த நிலையில், இன்று மாலை நெல்லையில் இருந்து புறப்பட வேண்டிய இந்த சிறப்பு ரெயிலானது தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இணைப்பு ரெயில் தாமதம் காரணமாக 7 மணி 15 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 2 மணிக்கு (அதாவது செப்.6-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு) நெல்லையில் இருந்து புறப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்