நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூரில் நீட் தேர்வு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-21 18:45 GMT

திருச்செந்தூர்:

கையெழுத்து இயக்கம்

திருச்செந்தூர் கே.டி.எம். திருமண மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் நீட் தேர்வு விலக்கு கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையொப்பமிடும் நிகழ்ச்சியின் தெடக்க விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கையொப்பமிடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தி.மு.க. மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்றார். தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் வக்கீல் சித்திக் கலந்துகொண்டு நீட்தேர்வு விலக்கு குறித்து பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசி பொன்ராணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், நவீன்குமார், பாலசிங், இளங்கோ, ஜோசப், இளையராஜா, கொம்பையா, ஜெயக்கொடி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகம்மது, ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் கமாலுதீன், ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மீணவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஆனந்ரொட்ரிகோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்