நாகையில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு; 1,723 பேர் தேர்வு எழுதினர்

நாகையில் 3 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. 1,723 பேர் தேர்வு எழுதினர். 27 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Update: 2023-05-07 19:15 GMT

நாகையில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு நடைபெற்றது. 1,723 பேர் தேர்வு எழுதினர். 27 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 'நீட்' எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. அதன்படி நாகை, காரைக்கால் மாவட்ட மாணவர்களுக்கான நீட் தேர்வு நாகை நகரில் நடந்தது.

நாகையில் 3 மையங்கள்

நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி, சின்மையா பள்ளி, இ.ஜி.எஸ். பிள்ளை பள்ளி ஆகிய 3 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுக்காக, காலை முதலே தேர்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர். மதியம் 1.30 மணி வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்

1,723 பேர் தேர்வு எழுதினர்

இந்த தேர்வை எழுதுவதற்காக நாகை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 1,750 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,723 பேர் தேர்வு எழுதினர். 27 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்த்த பின்னர் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கம்மலுக்கு அனுமதி இல்லை

செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. மாணவிகள் தலை முடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்த தங்களுடைய பெற்றோரிடம் சடைமாட்டி, கம்மல் உள்ளிட்ட அணிகலன்களை கழட்டி கொடுத்துவிட்டு தேர்வு மையத்துக்குள் சென்றனர். நாகையில் அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்