விளாத்திகுளம் அருகே ரூ.4.91 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்:மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்

விளாத்திகுளம் அருகே ரூ.4.91 லட்சத்தில் மதிப்பீ்ட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய டிரான்ஸ்பார்மரை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

Update: 2023-10-25 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட கே.சுந்தரேஸ்வரபுரம் ரூ.4.91 லட்சம் மதிப்பீட்டில் 25 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், நகர செயலாளர் வேலுச்சாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்