விளாத்திகுளம் அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

விளாத்திகுளம் அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர், குமாரசித்தன்பட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலில் காலை 6 மணிக்கு வேததிருமுறை பாராயணம், இரண்டாம் கால யாகபூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் தர்ம சாஸ்தா அய்யப்பன், பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கு சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் புதூர், நாகலாபுரம், குமாரசித்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதூர், குமாரசித்தன்பட்டி கிராம பொதுமக்கள், ஐயப்பா சேவா சங்கம், கோவில் நிர்வாகிகள் முரளி கிருஷ்ணா, செந்தில்வேல், சீனிவாசகம், மாரிபாண்டியன், பழனிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்