வருசநாடு அருகேதடுப்பணைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

வருசநாடு அருகே தடுப்பணைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-07-25 18:45 GMT

வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்பில் பாலசுப்ரமணியபுரம் ஓடையின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளில் நீர் விழும் இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது.

இதனால் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மண் அரிப்பு அதிகமாகி தடுப்பணை சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 தடுப்பணைகளிலும் நீர் விழும் இடத்தில் சிமெண்டு கலவை மூலம் பலப்படுத்த ஒன்றிய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் கடந்த 2 நாட்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்