உத்தமபாளையம் அருகேகஞ்சா வியாபாரிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
உத்தமபாளையம் அருகே கஞ்சா வியாபாரிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக, உத்தமபாளையம் அருகே தேவாரம் அரண்மனை தெருவை சேர்ந்த பாண்டிச்செல்வம், வடக்கு நாடார் தெருவை சேர்ந்த சுப்பிரமணி, சர்ச் தெருவை சேர்ந்த ராஜீ ஆகிய 3 பேரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மதுரை மத்திய கிளை சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.