தேனி அருகேசாமி கும்பிடுவதில் தகராறு; 4 பேர் கைது
தேனி அருகே ஒரு கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பைச் சேர்ந்தவர்களும் இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி, வாழையாத்துப்பட்டியை சேர்ந்த நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், தேனியை சேர்ந்த ராமமூர்த்தி, ஓடைப்பட்டியை சேர்ந்த காளிதாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்றொரு தரப்பில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த அய்யனன் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் செல்வகண்ணன், நடராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.