நம்பியூர் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு

நம்பியூர் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-26 21:36 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே குருமந்தூர் மோளபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கூட மாணவிகள் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து நம்பியூர் செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் கண்டக்டர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினார்கள். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை 6 மணி அளவில் புதுசூரிபாளையம் என்ற இடத்தில் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாணவிகள் கூறிய அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நம்பியூர் போலீசார் அங்கு சென்று பஸ்சை சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் பஸ்சை விடுவித்தனர். பின்னர் நம்பியூர் போலீஸ் நிலையம் சென்று, சம்பந்தப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் மீது மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்