முறப்பநாடு அருகே லாரிகளில் ஆற்றுமணல் கடத்திய 2 பேர் கைது

முறப்பநாடு அருகே லாரிகளில் ஆற்றுமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-04 11:41 GMT

ஸ்ரீவைகுண்டம்:

முறப்பநாடு பகுதியில் உரிய அனுமதியின்றி 2 லாரிகளில் ஆற்றுமணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆற்று மணல் கடத்தல்

ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தார் சுடலை வீரபாண்டியன் மற்றும் வருவாய்த்துறையினர் முறப்பநாடு அருகே உள்ள அனந்தநம்பிகுறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரிகளில் உரிய அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி சென்றது தெரியவந்தது.

அந்த லாரிகளில் 16 யூனிட் மணல்கள் இருந்தன. மணலுடன் அந்த லாரிகளை அதிகாரிகள் முறப்பநாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது

மணலை கடத்திய கன்னியாகுமரி மாவட்டம் குட்டக்குழி தேவராஜ் மகன் ஸ்டீபன்(வயது 43), சவரக்காடு செல்லமுத்து மகன் சதீஷ்(35) ஆகிய 2 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து துணை தாசில்தார் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து ஆற்றுமணலை கடத்திய 2 பேரையும் கைது செய்தார். மேலும் 2 லாரிகள், 16 யூனிட் மணலை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர், இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எங்கு கடத்தி செல்லப்பட்டது? என போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்