காட்டுமன்னார்கோவில் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை படிக்காமல் விளையாடியதை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு
காட்டுமன்னார்கோவில் அருகே படிக்காமல் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழ கடம்பூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் கவுரி (வயது 17). இவர் கண்டமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் கவுரி படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் மங்களநாயகி, கவுரியை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த கவுரி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக கவுரி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.