ஆசனூர் அருகேமரம் மீது சரக்கு வேன் மோதல்
ஆசனூர் அருகே மரம் மீது சரக்கு வேன் மோதிக்கொண்டன.
தாளவாடி
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. நேற்று காலை ஆசனூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.