என்.சி.சி. மாணவர்களுக்கு தேர்வு

நாசரேத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு தேர்வு நடந்தது.

Update: 2023-02-10 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர்களுக்கான 'ஏ' கிரேடு சான்றிதழ் தேர்வு நடைபெற்றது. மேல்நிலைப்பள்ளிகளில் என்.சி.சி.யில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 'ஏ' கிரேடு சான்றிதழ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு 9-வது சிக்னல் கம்பெனி என்.சி.சி. சார்பில் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சின்ஹா உத்தரவின்படி நடைபெற்ற இந்த தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி, பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வை கவில்தார் தேசிங்குராஜா மற்றும் நவுசத் அலி ஆகியோர் நடத்தினர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர் தலைமையில் தலைமை ஆசிரியர் ஜெபகரன் பிரேம்குமார், என்.சி.சி. ஆசிரியர் சுஜித் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்