நாசரேத் பகுதிகிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

நாசரேத் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-12-26 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் சுற்று வட்டார கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் விடிய, விடிய நடைபெற்றது. தெருக்கள் மற்றும் வீடுகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே மின்விளக்குகளால் ஜொலித்தது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தலைமை ஆலயமான நாசரேத் கதீட்ரலில் கிறிஸ்துமஸ் பண்டி கையை முன்னிட்டு ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் கதீட்ரல் உதவி குருவாணவர் பொன் செல்வின் அசோக்குமார் தேவ செய்தி வழங்கினார். கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலையில் ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை தலைமை குருவானவர் மர்காஷியஸ் டேவிட் வெஸ்லி தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஞானஸ்தான ஆராதனையும், இரவு 7 மணிக்கு மாலை ஆராதனையும் நடைபெற்றது. இதேபோல் மூக்குப்பீறி தூயமாற்கு ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சபை ஊழியர் ஜாண் வில்சன் தலைமையிலும் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை சலேட் ஜெரால்டு தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனை சிறப்பு வழிபாடு கள் நடைபெற்றது. பிரகாசபுரம் தூயதிரித்துவ ஆலயத்தில் சேகர குருவானவர் கிராக்ஸ்லி பிரேம்குமார் தலைமையிலும்

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகர குருவானவர் ஆல்வின் ரஞ்சித்குமார் தலைமையிலும் பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. இதேபோல் நாசரேத் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்