தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது.

Update: 2023-10-24 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 11 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் 11-ம் நாளான நேற்று மகிஷாசூர வதம் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைந்தது. இதில் தியாகதுருகம் நகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிறைவு நாளையொட்டி கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழா பூஜைக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்