நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா
நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ராமகிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளி வளாகங்களில் தூய்மை பணி, மழைநீர் சேகரிப்பு அமைத்தல், மரக்கன்று நடுதல், சட்ட விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, ஆளுமைப்பண்பு பயிற்சி போன்ற பல்வேறு பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்.
அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சா.இளங்கோ, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சி.இரவிவர்மன், உதவி திட்ட அலுவலர் கே.ராசேந்திரன், உதவித்தலைமை ஆசிரியர்கள் சி.வேல்முருகன் பி.முருகேசன், தொழிற்கல்வி பயிற்றுனர் எம்.சுடலைமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.