தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளுக்கான 'சி' சான்றிதழ் தேர்வு

தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளுக்கான ‘சி’ சான்றிதழ் தேர்வு நடந்தது.

Update: 2023-02-18 20:33 GMT

திருச்சி மண்டல அளவிலான தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளுக்கான 'சி' சான்றிதழ் தேர்வு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தேர்வில் 724 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த தேர்வு கர்னல்கள் சுனில்பட், சந்திரசேகர், வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில் செய்முறை தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு நடக்கிறது. செய்முறை தேர்வில் துப்பாக்கியை கையாளும் திறன், வரைபடம் திறன் பயிற்சி, போர்க்களத்தில் வீரர்கள் எதிரிகளை கையாளும் திறன், அணிவகுப்பு பயிற்சி, தொலை தொடர்பு கருவிகளை பயன்படுத்தும் அனுபவம் குறித்து ேதர்வு நடைபெற்றது. தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் வில்சன் செய்துள்ளார். இதேபோல் தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்குடி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் தேர்வு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்