தேசிய லோக் அதாலத்: தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

தேசிய லோக் அதாலத்: தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.445 கோடி இழப்பீடு.

Update: 2022-06-26 22:17 GMT

சென்னை,

'தேசிய லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட, தாலுகா கோர்ட்டுகள் என தமிழகத்தில் மொத்தம் 433 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சரவணன், பரதசக்ரவர்த்தி, முகமது ஷபி, மாலா, சவுந்தர், சுந்தர்மோகன், குமரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் 83 ஆயிரத்து 196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 445 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 225 குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குகளுக்கும், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 502 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்