கிருஷ்ணகிரியில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றுகிறார்
கிருஷ்ணகிரியில் இன்று சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சுதந்திர தின விழா
நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா இன்று காலை 9.05 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொள்கிறார். அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.