நாராயணசாமி கோவில் வருசாபிஷேகம்

மாவடிபண்ணை நாராயணசாமி கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-06-27 12:10 GMT

தென்திருப்பேரை:

மாவடி பண்ணை கிராமத்திலுள்ள நாராயணசுவாமி கோவில் வருடம்தோறும் ஜூன் 26ஆம் தேதி விருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம் அதுபோல் இந்த ஆண்டு பதினைந்தாம் ஆண்டு வருசாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதி பையன்ராஜா தலைமையில் ஐயாவுக்கு பணிவிடையும், விழாவும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சந்தன குடம் எடுத்து, ஐயா திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு பொங்கலிட்டு பணிவிடை நடந்தது. விழா ஏற்பாடுகளை மாவடி பண்ணை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்