நாராயண சுவாமி கோவில் திருவிழா

பேட்டை நாராயண சுவாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-09-10 19:28 GMT

பேட்டை:

பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாராயண சுவாமி கோவில் திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு தர்மம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு, உண்பான் தர்மம், மாலை 4 மணிக்கு சந்தனக்குடம் வீதி உலா, இரவு 8 மணிக்கு திருக்காட்சி மற்றும் கலி வேட்டை, 9 மணிக்கு தர்மம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அய்யா திருவிளக்கு காட்சி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பேட்டை நாராயண சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்