தமிழக பொதுத்துறை செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம்
தமிழக பொதுத்துறை செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், ஜெகந்நாதன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில்," பொதுத்துறை செயலாளராக உள்ள நந்தகுமார், மனிதவள மேம்பாட்டுதுறைச் செயலாளராக கூடுதல் பதவி வகிப்பார்.
மேலும் அரசு கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளராக உள்ள ஜெகந்நாதனுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.