சேந்தமங்கலம்
கொல்லிமலை செம்மேட்டில் உள்ள பஸ் நிலையத்திற்கு நேற்று மாலை நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் ய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள சுகாதார வளாகம் அருகில் இருந்த குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததை பார்த்தார். பின்னர் அங்குள்ள வாழவந்தி நாடு ஊராட்சி செயலாளர் சங்கரை அழைத்து ஏன்? இங்கு போடப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது என்று கண்டித்தார். மேலும் அவைகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டார். அதையடுத்து அங்குள்ள சுகாதார வளாகத்திற்குள் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்பு அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தப்படுகிறதா? என்று கேட்டறிந்து அவைகளை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த ஆய்வின்போது கொல்லிமலை துணை தாசில்தார் மணிமாறன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.