போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையிலான நிர்வாகிகள் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கவுரவத்தை குறைக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைக்கும் வகையிலும்,
இரு வேறு பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பொய் புகார் அளித்து சர்ச்சையை கிளப்பி வரும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர், பாசறை பிரிவினர் உள்பட பலர் உடனிருந்தனர்.