நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்; 38 பேர் கைது

சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-28 18:45 GMT

சிவகிரி:

சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளிச்செல்வதை கண்டித்தும், சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சீரான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாசுதேவநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் தொகுதி தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிவகிரி நகர செயலாளர் ராஜதுரை, தலைவர் குட்டி என்ற ஆறுமுகம், பொருளாளர் வினோத், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 38 பேரை கைது செய்து பஸ்நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்