நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு;
சீர்காழி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. இதில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பயிலும் மாணவிகள் தேவதர்ஷினி மற்றும் திவேகா ஆகியோர் பங்கேற்று "எந்திரங்களில் செயற்கை நுண்ணறிவு" என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்து 3-வது பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் செயலர் செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ், கல்விசார் இயக்குனர் மோகன், கல்லூரியின் நிர்வாக தலைவர் மணிகண்ட குமரன், கல்லூரியின் முதல்வர் ராமபாலன், முதலாம் ஆண்டு துறை தலைவி தீபா ஆகியோர் மாணவிகளை பாராட்டினர்.