மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.;

Update:2023-10-19 00:00 IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அபிமணி (வயது 19), கூலி தொழிலாளி. இவர் கடந்த 11-ந் தேதி இரவு வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் ஆண்டிமடம் அருகே கொளத்தூர் குவாகம் ரோட்டில் உள்ள ஒரு முந்திரி காட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் இறந்து கிடந்தது அபிமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்