முத்துமாலை அம்மன் கோவில்உண்டியல் வருவாய் ரூ.19 லட்சம்

குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.19 லட்சம் கிடைத்துள்ளது.

Update: 2023-08-15 18:45 GMT

தென்திருப்பேரை:

குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழா கடந்த ஜூலை மாதம் நடந்தது. ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் கோவில் உண்டியல்கள், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பேராட்சி செல்வி, சிவா மற்றும் ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள். இதில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 95 ஆயிரத்து 289-ம், 16 கிராம் தங்கம், 215 கிராம் வெள்ளி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் நம்பி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக பணியாளர்கள் பாலகிருஷ்ணன், ஈஸ்வரன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்