வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற முஸ்லிம்கள்
வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு முஸ்லிம்கள் சீர்வரிசை எடுத்துச்சென்றனர்.;
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் வளநாடு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் முஸ்லிம்கள், கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி வாழைப்பழம், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு, பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அங்கு சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். இதையடுத்து முஸ்லிம்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சீர்வரிசை வழங்கப்பட்ட பின்னர் வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.