பழனிக்கு கட்டை வண்டியில் செல்லும் முருகபக்தர்கள்

Update: 2023-02-06 19:30 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக பல்வேறு குழுக்களாக ஏராளமான முருக பக்தர்கள் தேவூர் பகுதி வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி ஆலச்சம்பாளையம், அரசிராமணி, மலங்காடு, காட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் பலர், கட்டை வண்டி எனப்படும் கூட்டு மாட்டு வண்டியில் முதியவர்களை ஏற்றிக்கொண்டும் கால்நடை தீவனங்களை மாட்டு வண்டியின் மேல் குடையில் கட்டி வைத்தவாறும் தேவூர் வழியாக பழனிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர்.

தைப்பூசம் நிறைவு பெற்றிருந்தாலும் முருகப்பெருமானை தரிசிக்க இந்த கட்டை வண்டிகளின் அணிவகுப்பை பார்த்து தேவூா் பகுதி சிறுவர்களும், குழந்தைகளும் ஆர்வமாக பார்க்கின்றனர். என்ன தான் சொகுசு கார்கள் வந்தாலும் நம்மூரில் காற்று மாசுபாடு இல்லாத கட்டை வண்டி பயணத்துக்கு நிகராகுமா? சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? என்று பாடல் வரிகள் தான் மேலே உள்ள படத்தை பார்க்கும் போது நினைக்க தோன்றுகிறதோ?.

Tags:    

மேலும் செய்திகள்