மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தவர் கைது

மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தவர் கைது

Update: 2022-08-30 17:31 GMT

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). விவசாயி. இவர் குலமங்கலம் பகுதியில் ஒரு கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதை குடும்பத்துடன் தங்கி கவனித்து வந்தார். கடன் பிரச்சினையால் இவர் கடந்த 18-ந் தேதி மனைவி சுரேகா(35), மகள் யோகிதா(16), மகன் மோகனன்(12) ஆகிய 3 பேரையும் கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தார். மேலும் தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகனை, மனைவி உள்பட 3 பேரை கொலை செய்ததாக முருகனை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்